மல்யுத்தம்: சீமா பிஸ்லா, சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி !

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் மற்றும் வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.

FOLLOW US: 

மல்யுத்த விளையாட்டில் அண்மை காலங்களாக இந்திய வீரர் வீராங்கனைகளை கோலோச்சி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் என அனைத்திலும் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவகையில் இம்முறை டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் 6 வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தனர். 

இந்நிலையில் தற்போது போலாந்தில் நடைபெற்று வரும் உலக ஒலிம்பிக் தகுதி போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி மேலும் 2 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்தப் தகுதி போட்டிகளில் ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். இவர் அரையிறுதிப் போட்டியில் வெனிசுலாவின் ரோபர்டியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். மல்யுத்தம்: சீமா பிஸ்லா, சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி !

இதேபோல் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா அரையிறுதிப் போட்டியில் போலாந்து நாட்டின் லூகாசியக்கை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் இவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த தகுதி போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2 பேரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறுவார்கள். 

இந்தியா சார்பில் ஏற்கெனவே 3 வீரர்கள் மற்றும் 3 வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருந்தனர். ஆடவர் பிரிவில் ரவி தஹியா(57 கிலோ), பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மகளிர் பிரிவில் வினேஷ் போகாட்(53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தற்போது மேலும் இருவர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags: Wrestling Indian wrestlers Tokyo Olympic Qualification Sumit Malik Seema Bisla

தொடர்புடைய செய்திகள்

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!