மேலும் அறிய
Advertisement
இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஹர்மன்பிரீத் கவுர். இவர், 20 ஓவர்கள் போட்டிக்கான அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்ற அவர், காயம் காரணமாக அடுத்து நடைபெற்ற டி20 போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஹர்மன்பிரீத் கவுருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 32 வயதான ஹர்மன்பிரீத் கவுர் இதுவரை 2 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி, 114 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion