Virat Kohli : யப்பா 10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்... விராட் கோலி சொத்து மதிப்பு விபரங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உலா வரும் விராட் கோலி கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைதி மனப்பாங்கிலே ஆடி வந்த இந்திய அணியின் மனநிலையை ஆக்ரோஷ மனப்பாங்கிற்கும், வெற்றிக்காக போராடும் குணாதிசயம் கொண்ட அணியாகவும் மாற்றியதில் விராட் கோலியின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார் விராட் கோலி. ரோகித் ஷர்மா , விராட் கோலி என அடுத்தடுத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்தை ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
View this post on Instagram
விராட் கோலியின் சொத்து மதிப்பு
சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து அதிகப்படியான சம்பளம் கிரிக்கெட் வீரர்களுக்கே வழங்கப்படுகிறது. விளையாடிய காலத்திலும் சரி ஓய்வு பெற்ற பின்னும் சரி பல விதங்களில் அவர்களுக்கு வருமானம் இருந்து வருகிறது. அந்த வகையில் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன
டைம்ஸ் நாவ் வெளியிட்டுள்ள தகவலின் படி விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு 1050 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு விரர்களில் ஒருவராக விராட் கோலி இருந்து வருகிறார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு ரூ 255 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து 1300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















