Ind vs SL 2nd ODI: முட்டிப் பாய்ந்த இலங்கை: தட்டி தூக்கிய சஹால்...!
சஹாலுக்கு ஹாட்-ட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.எனினும், ஹாட்-ட்ரிக் பந்து டாட் பந்து ஆனதால், ஹாட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப்பை சஹால் தவறவிட்டார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் துவங்கிய நிலையில் அவிஸ்கா பெர்னாண்டோ, மினட் பனுகா ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கியது. 13 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில்,ஒரு விக்கெட் கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் இந்திய பந்து வீச்சை இலங்கை துவக்க வீரர்கள் எளிதில் அணுகினர். இந்த நிலையில் ஆட்டத்தில் 14வது ஓவரை வீசிய சஹால், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Twin strikes from @yuzi_chahal! 👏 👏
— BCCI (@BCCI) July 20, 2021
Sri Lanka 77/2 after 13.3 overs as Minod Bhanuka & Bhanuka Rajapaksa depart. #SLvIND #TeamIndia
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/i32dlX5bqA
இதனால், சஹாலுக்கு ஹாட்-ட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.எனினும், ஹாட்-ட்ரிக் பந்து டாட் பந்து ஆனதால், ஹாட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப்பை சஹால் தவறவிட்டார். மினட் பனுகா 42 பந்துக்கு 36 ரன்களும், பனுகா ராஜபக்சே முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நான்காவது வீரராக தனஞ்செய டிசில்வா இறங்கியுள்ளார்.
இந்திய அணி விவரம்:
Toss & Team Update from Colombo:
— BCCI (@BCCI) July 20, 2021
Sri Lanka have elected to bat against #TeamIndia in the second #SLvIND ODI.
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM
India retain the same Playing XI 👇 pic.twitter.com/MrVdZNj09g
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா, இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்:
Your Team Sri Lanka 🇱🇰 for the 2nd ODI!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 20, 2021
Sri Lanka make one change as Kasun Rajitha replaces Isuru Udana.
COME ON, SRI LANKA! Let's do this!
LIVE 👉https://t.co/CnIxV7DIpk #SLvIND pic.twitter.com/D6hxYBZ6ws
தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா,வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன், கசுன் ரஜிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.