IND vs ENG 4th Test: அரை சதம் மிஸ் செய்த ராகுல்... இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!
6 பவுண்டரிகள், 1 சிக்சர் என மொத்தம் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுல் அவுட்டானார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, மதிய உணவு இடைவெளியின்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், ராகுல் நிதானமாக ஆடினர். 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என மொத்தம் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுல் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, ரோஹித்தோடு சேர்ந்து விளையாடி வருகிறார்.
Lunch at The Oval 🍲
— ICC (@ICC) September 4, 2021
The visitors take a lead of 9 runs but lose the wicket of KL Rahul. #WTC23 | #ENGvIND | https://t.co/zRhnFiKhzZ pic.twitter.com/joRlgotVhy
மேட்ச் ரீகேப்:
முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்துள்ளார்.
Also Read: ‛புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ இங்கிலாந்து இம்சை அரசன் ‛ஜார்வோ’ கைது!
Milestone 🔓 - @ImRo45 breaches the 15K run mark in International Cricket.#TeamIndia pic.twitter.com/st5U454GS6
— BCCI (@BCCI) September 3, 2021
ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம்....! பாரா பேட்மிண்டனில் உலக சாம்பியன் பிரமோத் பகத் அசத்தல் !