Ind vs Eng: ஊரே கிளம்பிடுச்சு... அஷ்வினை ஏன் சேர்க்கலை? பதில் சொல்லுப்பா... கோலியை நோக்கி பாயும் கேள்விகள்!
இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் அஷ்வின் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவாகவே, லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பெளலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் அஷ்வின் இடம் பெறவில்லை. இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.
The non selection of @ashwinravi99 has to be greatest NON selection we have ever witnessed across 4 Tests in the UK !!! 413 Test wickets & 5 Test 100s !!!! #ENGvIND Madness …
— Michael Vaughan (@MichaelVaughan) September 2, 2021
I can't believe they left out Ashwin again, on England's most spin-friendly ground. This team is unbelievable. You pick your five best bowlers, @ashwinravi99 has to be the first or second name. Omitting him & @MdShami11 at the Oval is like a death-wish -- as if you want to lose!
— Shashi Tharoor (@ShashiTharoor) September 2, 2021
I really hope it works but I am flabbergasted that India have gone in without Ashwin again.
— Harsha Bhogle (@bhogleharsha) September 2, 2021
No @ashwinravi99 the world’s number 2 bowler not playing at Oval.. hope the selectors know a template/something that none of us do!👍👍 #IndvsEng
— Rajdeep Sardesai (@sardesairajdeep) September 2, 2021
No Ashwin?!!! (Should save this as templated tweet now) #EngvsInd pic.twitter.com/lOwrskMQd6
— Gaurav Kapur (@gauravkapur) September 2, 2021
He’s only the number 2 ranked Test bowler in the world playing on a ground that could potentially aid spinners and yet he misses out?? #Ashwin
— zainab abbas (@ZAbbasOfficial) September 2, 2021
இந்நிலையில், இன்று தொடங்கி இருக்கும் டெஸ்ட் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், அஷ்வினை அணியில் சேர்க்காததற்கு கேப்டன் கோலியின் பதில் என்னவாக இருக்கும் என்பது பொருத்திருந்து பார்ப்போம். கேப்டன் கோலி வேறு திட்டத்தோடு களமிறங்கி இருந்தாலும், அது எந்த அளவுக்கு சாதகமாக என்பதை போட்டியின் முடிவு விளக்கிவிடும்.