தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஒயிட்வாஷை தவிர்க்குமா இங்கிலாந்து?

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.

FOLLOW US: 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்றும், டி20 தொடரை 3-2 என்றும் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, புனேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி ஷிகர் தவான், விராட் கோலி, குருணால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஒயிட்வாஷை தவிர்க்குமா இங்கிலாந்து?

மொத்தம் 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் போட்டிக்கான தொடரின் இரண்டாவது போட்டி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புனே கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியிலும் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால், அடுத்த இரு போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்படுவார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டி தொடரை இழந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தால்,  மூன்று வடிவ போட்டிகளையும் இழந்து ஒயிட்வாஷ் ஆகும் நிலை ஏற்படும்.

Tags: india kholi england morgan butler odi pune whitewash

தொடர்புடைய செய்திகள்

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

Steve Smith Test Ranking : முதல் இடத்துக்கு முன்னேறிய ஸ்டீவன் ஸ்மித் : 4-வது இடத்திற்கு முன்னேறிய கோலி..!

ரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

ரொனால்டோ செய்த சம்பவம்;  கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்!

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!