மேலும் அறிய

Ind vs Eng 4th Test: முதல் விக்கெட்டை இழந்து 100 ரன்களை எட்டிய இங்கி., விக்கெட் எடுக்க இந்தியா போராட்டம்!

கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்தபோது, பர்ன்ஸ் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் அவுட்டானார். அரை சதம் கடதிருந்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹசீப்பும் அரை சதம் கடந்திருக்கிறார். இங்கிலாந்துக்காக மாலன் ஒன் - டவுன் களமிறங்கியுள்ளார். 107 ரன்கள் எட்டியுள்ள இங்கிலாந்து அணிக்கு, வெற்றி பெற 181 ரன்கள் தேவைப்படுகிறது.

ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் இலக்கை துரத்திச்சென்ற அணிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள அணி என்ற சாதனையை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்த நிலையில், சுனில் கவாஸ்கரின் அதி அற்புதமான இரட்டை சதத்தினாலும், சேட்டன் சவுகான், திலீப் வெங்கர்சகர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களை குவித்தது. கவாஸ்கரின் 221 ரன்களால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்சில் அதிகபட்சமாக 369 ரன்களை எடுத்துள்ளது. 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திற்கு 500 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் கெவின் பீட்டர்சனின் சதம் மற்றும் இயான் பெல்லின் அரைசதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்த்தது. ஓவல் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற முதல் தர போட்டிகளில் நான்கு முறை மட்டுமே 350 ரன்கள் நான்காவது இன்னிங்சில் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்பது மிகவும் சவாலான இலக்கு ஆகும். அந்த அணியின் கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளது. போட்டியின் கடைசி நாளான இன்று அந்த அணி மேலும் 291 ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்சின் அதிரடியான சதத்தின் உதவியுடன் 362 ரன்களை குவித்திருந்தனர்.

ஆனால், தற்போது அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை. அவரது இடத்தை  நிரப்பும் அளவிற்கு ஆல்ரவுண்டரும் அந்த அணியில் தற்போது இல்லை. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீதுக்கு பிறகு பெரியளவில் அந்த அணி கேப்டன் ஜோ ரூட்டையே நம்பியுள்ளது. இளம் வீரர் போப் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடி வருகிறார். மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அந்த அணிக்கு ஆறுதலாக பேட் செய்து வருகின்றனர். இருப்பினும் சீரான ஆட்டத்தை இந்தியாவைப் போல இங்கிலாந்தும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இதனால், இன்று நடைபெறும் இறுதிநாள் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Embed widget