மேலும் அறிய

ENG vs IND 2021: ஓவல் மைதானத்தின் தனிமையில் அஷ்வின்... ரசிகர்கள் ஆதங்கம்!

அஷ்வின் இந்த போட்டியில் விளையாடி இருந்தால் இங்கிலாந்தின் வெற்றி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும் என முன்னாள் கிரிக்கெட்டர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியில் அஷ்வின் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் கமெண்ட் செய்தனர். 

இந்நிலையில், அஷ்வினை அணியில் எடுக்காதது பற்றி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஓவல் கிரிக்கெட் மைதானத்டில் அஷ்வின் தனிமையில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது. 

முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வின் இடம் பெறாதது குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அஷ்வின் இந்த போட்டியில் விளையாடி இருந்தால் இங்கிலாந்தின் வெற்றி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில், அஷ்வின் சர்ரே அணிக்காக விளையாடி விளையாடினார். இந்த தொடரில் சோமர்செட் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  அஷ்வின், ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓவல் மைதானத்தில் அதிரடி காட்டிய அஷ்வின் அணியில் இடம் பெறாதது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டி முடிவில் கேப்டன் கோலி அதற்கான பதிலை தெரியப்படுத்துவார் என தெரிகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
2027-ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஓய்வா? - ட்விஸ்ட் ஆன பதிலளித்த தோனி
2027-ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஓய்வா? - ட்விஸ்ட் ஆன பதிலளித்த தோனி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget