(Source: ECI/ABP News/ABP Majha)
அனைத்தையும் பேக் செய்துவிட்டேன் - ட்விட்டரில் டிவில்லியர்ஸ் பதிவு..
பெங்களூர் அணியில் இணைவதற்காக அனைத்தையும் பேக் செய்துவிட்டேன் என்று ட்விட்டரில் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றனர்.
ஐ.பி.எல்.
இங்கிலாந்துடனான தொடரை முடித்துவிட்டதால், இந்திய வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்கு பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு ஓய்வு நாளே இல்லை என்று பதிவிட்டிருந்தார். மேலும், பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்சை டேக் செய்து, நீங்கள் இன்னும் விக்கெட்டுகளுக்கு இடையே அதே வேகத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Loving the form <a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@imVkohli</a> .. I’m all packed to join the team <a href="https://t.co/6rBIV3T3EH" rel='nofollow'>pic.twitter.com/6rBIV3T3EH</a></p>— AB de Villiers (@ABdeVilliers17) <a href="https://twitter.com/ABdeVilliers17/status/1376482548273061889?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
பேக் செய்துவிட்டேன்:
இதற்கு பதிலளித்துள்ள ஏபி டிவில்லியர்ஸ் , அணியில் இணைவதற்கு அனைத்தையும் பேக் செய்துவிட்டு விட்டேன் என்று பதிவிட்டுள்ளார். விராட்கோலியின் ஃபார்மும் பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 360 டிகிரி வீரர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.