Watch Video: அல்லு அர்ஜூனாக மாறிய டேவிட் வார்னர்: கலாய்த்துவிட்ட விராட் கோலி..!
புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று செயலி மூலம் மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று செயலி மூலம் மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா’ என்ற குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே டேவிட் வார்னர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். என்னய்யா இவ்வளவு பெரிய மனுஷன் இப்படி குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கார் என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கும். ஆனாலும் அவரின் செயல்பாட்டை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அடிக்கடி ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.
View this post on Instagram
அதுபோலத்தான் தற்போது புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ‘ஆர் யூ ஓகே’ என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்