Tamil Thalaivas Vs Dabang Delhi : கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்...தபாங் டெல்லி த்ரில் வெற்றி!
தபாங் டெல்லி அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
10 வது ப்ரோ கபடி லீக்:
10-வது ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடி வருகின்றன.
தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ்:
Dilliwalo kaisa laga Dabangs ka comeback? 😉 #DabangDelhi #HarDumDabang #DELvCHE pic.twitter.com/LOEKSfOten
— Dabang Delhi KC (@DabangDelhiKC) February 14, 2024
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45-43 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ்:
Raid points: 21
Super raids : 0
Tackle points: 14
All out points: 6
Extra points: 2
தபாங் டெல்லி:
Raid points: 26
Super raids : 1
Tackle points: 10
All out points: 6
Extra points: 3
இதையடுத்து இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மேலும் படிக்க: Watch Video: இப்படி கூடவா பந்து போடுவாங்க.. வாயை பிளந்த நெட்டிசன்கள்...குவைத் கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!