Watch Video: இப்படி கூடவா பந்து போடுவாங்க.. வாயை பிளந்த நெட்டிசன்கள்...குவைத் கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
இப்படி கூடவா பந்து போடுவாங்க என்பது போன்ற சம்பவம் குவைத் கிரிக்கெட்டில் நடைபெற்றுள்ளது.
KCC T20 சேலஞ்சர்ஸ் கோப்பை 2024:
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து கூடபார்க்க முடியாத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம். சில நேரங்களில் நகைச்சுவையாக நடைபெறும் சில விஷயங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அப்படி ஒரு நிகழ்வுதான் குவைத்தில் நடைபெற்றுள்ளது.
அதாவது குவைத்தில் கேசிசி டி20 சேலஞ்சர்ஸ் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குவைத் நேசனல்ஸ் அணியும் எஸ்பிஎஸ் சிசி அணியும் மோதியுள்ளன. இதில் முதலில் டாஸ் வென்றது எஸ்பிஎஸ் சிசி அணி. ஆனால், அந்த அணி பேட்டிங்கைத்தான் முதலில் தேர்வு செய்தது. அப்போது குவைத் அணி வீரர் வக்கார் என்பவர் வீசிய பந்து தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அந்த பந்து வேறு எங்கேயோ குத்தி wide ஆகப்போகிறது என பேட்ஸ்மேன் நினைத்து அதை அடிக்காமல் விட அந்த பந்து நேரடியாக செல்லாமல் திரும்பி ஸ்டெம்பை பதம்பார்த்தது.
வைரல் வீடியோ:
இதை சற்றும் எதிர்பார்க்காத பேட்ஸ்மேன் அப்படியே நிற்கிறார். இதன் மூலம் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். முன்னதாக, ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்து எப்படி ஸ்டெம்பை தாக்கியது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
unplayable.
— That’s So Village (@ThatsSoVillage) February 11, 2024
via Kuwait Cricket pic.twitter.com/Nx44HdMah6
எட்டாயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் பந்து வீச்சாளரை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு இது தான் என்று கூறியுள்ளார்.
Ball of the century.
— HENRY MORRIS (@mrhenrymorris) February 12, 2024
மேலும் சிலர் சுழற்பந்தில் முத்தையா முரளிதரன், ஹர்பஜங் சிங்கையே இந்த பந்து வீச்சாளர் மிஞ்சிவிட்டார் என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து பார்க்காத எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் சிலர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ICC Women's ODI Rankings: ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை... 4-வது இடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்!