IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!
IND vs ENG 3rd Test: இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
![IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு! England Announce Playing 11 For IND vs ENG Rajkot Test IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/0cc50bc8431ee4e35285accb837c80ed1707903970854572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது.
இச்சூழலில் நாளை நடைபெறும் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி இன்று வெளியிட்டுள்ளது. பெரிதாக தங்கள் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாத இங்கிலாந்து அணி ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்துள்ளது. அதன்படி, சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நாளை தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
One change to our XI for the third Test in Rajkot 🏏 🔁
— England Cricket (@englandcricket) February 14, 2024
🇮🇳 #INDvENG 🏴 #EnglandCricket
3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஆடும் 11 வீரர்கள்:
சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய அணியை பொறுத்தமட்டில் நாளை நடைபெறும் போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் விளையாட மாட்டர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம் அவர்களுக்கு மாற்றாக இந்திய அணியில் துருவ் ஜூரெல் மற்றும் கே.எஸ்.பரத் ஆடும் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில், இந்தியாவின் மிடில் ஆர்டரில் ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் போன்ற இளம் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, உடற்தகுதி காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்றால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்கலாம்.
இந்திய அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், துருவ் ஜூரல்/கே.எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா/ அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்!
மேலும் படிக்க: ICC Women's ODI Rankings: ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை... 4-வது இடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)