மேலும் அறிய

கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா தகுதியா ? இருக்கு வாய்ப்பு!

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டி துவங்கும் அதே நாளில் தொடங்கும் இலங்கை-நியூசிலாந்து தொடரின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி இடம் தீர்மானிக்கப்படும் என்பதை இது குறிக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி மூன்று தொடர்களில், இறுதி நான்கு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. கடந்த வாரம் இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது இடத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இறுதி இடத்திற்கான போட்டியில் இரண்டு அணிகள் மட்டுமே உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் நான்கு போட்டிகளில் ஒன்றிற்கு எந்த வித மதிப்பும் இருக்கப்போவதில்லை.

ஏனெனில் தென்னாப்பிரிக்க அணியும் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டி துவங்கும் அதே நாளில் தொடங்கும் இலங்கை-நியூசிலாந்து தொடரின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி இடம் தீர்மானிக்கப்படும் என்பதை இது குறிக்கிறது. எனவே இன்று அகமதாபாத்தில்  தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி இதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த வகையில் இந்தியாவின் வாய்ப்புகள் எப்படி உள்ளன?

கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா தகுதியா ? இருக்கு வாய்ப்பு!

முதல் போட்டியாளர் ஆஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்ற பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. ஆனால் முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டு பெரிய தோல்விகளை தழுவ, இந்தியா முன்னேறியது. இந்தூரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா வெற்றியுடன் மீண்டு இறுதிப்போட்டியில் முதல் ஆளாக கால் வைத்தது.

தொடர்புடைய செய்திகள்: Ungalil Oruvan CM Stalin : ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை.. உங்களில் ஒருவன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!

இலங்கையா? இந்தியாவா?

WTC புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 68.52 புள்ளி சதவிகிதத்துடன் தங்கள் இடத்தை அடைத்தனர். WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இந்தியா WTC புள்ளிகள் பட்டியலில் 60.29 PCT உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் ஆசிய போட்டியாளர்களான இலங்கையும் இந்த ரேஸில் உள்ளது. இலங்கை அணி மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா தகுதியா ? இருக்கு வாய்ப்பு!

இந்தியா தகுதி பெறும் வாய்ப்புகள்

  1. இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்தியா வெற்றி பெற்றால், இந்தியா தான் இறுதிப்போட்டியின் இரண்டாவது போட்டியாளர்.
  2. இந்தியா டிரா செய்தால்... இந்தியாவின் புள்ளிகளில் 52.9 ஆக குறையும், ஆனால் இலங்கை நியூசிலாந்தை இரண்டு போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்யத் தவறினால், அப்போதும் இந்தியா தான் வெற்றிபெறும். அதாவது இலங்கை ஏதாவது ஒரு போட்டியில் டிரா செய்தாலோ, தோற்றாலோ, இந்தியா தகுதி பெரும்.
  3. இந்தியா தோற்றால்... இலங்கை அணி நியூசிலாந்தை இரண்டு போட்டிகளிலும் வெல்லக்கூடாது. இரண்டு போட்டியிலும் டிரா செய்தாலும் இந்தியா தகுதி பெரும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget