மேலும் அறிய

David Warner ODI Record: அதிரடி சதம்.. சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்..

இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர்.

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பையின் 24-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி இன்று (அக்டோபர் 24) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இன்றைய போட்டியில், முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். 15 பந்துகள் களத்தில் நின்று 9 ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஆட்டமிழக்க, மறுபுறம் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார்.

அதிரடியாக ஆடிய வார்னர்:

மொத்தம் 93 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 104 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை (6 சதம்) சமன் செய்துள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் வார்னர் சதம் அடித்தார்.

அந்த போட்டியில், 124 பந்துகளில் 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என மொத்தம் 163 ரன்களை குவித்தார்.

உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்கள்:

உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரை அவர் விளையாடிய 22 இன்னிங்ஸில் மொத்தம் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். அதேபோல், இன்றைய சதத்தின் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர். அதன்படி, உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய 23 இன்னிங்ஸில் 6 சதங்களை விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 44 உலகக் கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். அதில் மொத்தம் 6 சதங்கள் அடித்துள்ளார். 

நான்காவது இடத்தில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கரா இருக்கிறார். மொத்தம் 35 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார். மொத்தம் 42 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் 5 சதங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: ODI WC 2023 Maxwell: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம்! 40 பந்துகளில் வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!

மேலும் படிக்க:AUS Vs NED Score LIVE: 400 ரன்கள் இலக்கை நெருங்குமா நெதர்லாந்து? 3 ஓவர்களில் 27 ரன்கள்!

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Embed widget