Watch video: ”என்ன பண்ட் எந்த அணிக்கு ஆடப் போற?” மைதானத்தில் நாதன் லயனின் நகைச்சுவை
Border Gavaskar Test : முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் நாதன் லயன் இடையே நடந்த நிகழ்வு வைரலாகி வருகிறது,
ரிஷப் பண்ட் மற்றும் நாதன் லயன் இடையே நடந்த நகைச்சுவை உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் டெஸ்ட்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்து வருகிறது.
நடப்பு BGT சாம்பியன்கள் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு அறிமுகமானார்கள், மேலும் காயமடைந்த ஷுப்மான் கில்லுக்கு பதிலாக தேவ்தத் பாடிகல் ஆடினார்
ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் மெக்ஸ்வீனிக்கு ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமானர், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய 467 வது ஆஸ்திரேலிய வீரர் இவரானார்.
WHAT A SHOT BY NITISH ON HIS DEBUT. 🔥👌 pic.twitter.com/AJOv2idsFp
— Johns. (@CricCrazyJohns) November 22, 2024
முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுததனர்.
ஆஸ்திரேலிய அணி அதிகப்பட்சமாக ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: Devdutt padikkal : டக் அவுட்டில் இப்படி ஒரு சாதனையா! படிக்கலுக்கு இது தேவையா..
பண்ட்-லயன் உரையாடல்:
முதல் இன்னிங்ஸ்சில் இந்திய அணி விளையாடும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது லயன் பந்து வீச வந்தார். அப்போது லயன் பண்ட்டிடம். ”என்ன நண்பா எந்த ஐபிஎல் அணியில் விளையாட போகிறாய்” என்று கேட்டார். அதற்கு ரிஷப் பண்ட் ”நிஜமாக எந்த அணியில் விளையாட போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை” என்றார்.
SOUND 🔛 Just two old friends meeting! 😁🤝
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
Don't miss this stump-mic gold ft. 𝗥𝗜𝗦𝗛𝗔𝗕𝗛-𝗣𝗔𝗡𝗧𝗜! 🤭
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/vvmTdJzFFq
பண்ட்டை டார்கெட் செய்யும் அணிகள்:
இதே ஏலத்தில் ரிஷப் பண்ட்டை அதிக தொகை வைத்துள்ள அணிகளான பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் எடுக்க போட்டிப்போடும் என்று தெரிகிறது. அதே போல இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரராகவும் ரிஷப் பண்ட் இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.