KL Rahul Performance: ஐபிஎல் ஓகே... உலகக்கோப்பைக்கு...? சொதப்பும் ராகுலின் ரெக்கார்டு என்ன? ஆராயும் ABP நாடு!
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சோபிக்காத ராகுல், இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றத்தை தந்திருப்பது இந்திய அணியின் கோப்பை கனவையே குழி தோண்டி புதைத்துள்ளது.
ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் ரேஸில் இந்திய அணி முந்திச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து என இரு முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை இழந்து அரை இறுதிக்கு தேர்ச்சி பெறுவதற்கான ரேஸில் எதிர்ப்பாராதவிதமாக பின் தங்கியுள்ளது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களின் ஐபிஎல் பர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, அடுத்த மூன்று போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றை பற்றிய நச் அலசல் இதோ!
கே. எல் ராகுல்:
vs பாகிஸ்தான், துபாய் கிரிக்கெட் மைதானம் - 3 (8)
vs நியூசிலாந்து, துபாய் கிரிக்கெட் மைதானம் - 18 (16)
ஐபிஎல் தொடரில் ஸ்டார் பர்ஃபாமராக அசத்திய கே.எல் ராகுலின்மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. ஆனால், தேசிய அணி விளையாடும் முக்கியமான தொடரின் முக்கிய போட்டிகளில் சொதப்பி அனைவரது கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார் நம்பிக்கை பேட்ஸ்மேன் ராகுல்! 2021 ஐபிஎல் தொடரில், ஆரஞ்சு கேப்பிற்கான போட்டியில் டஃப் கொடுத்த ராகுல், 13 போட்டிகளில் 626 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தார். இதில் 6 அரை சதங்கள் அடங்கும்!
ஐபிஎல் தொடர் நடைபெற்ற போட்டிகளில், கடைசியாக துபாய் மைதானத்தில் விளையாடிய போட்டியில் 98* ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆனால், அந்த ஃபார்ம் டி-20 கோப்பைக்கு எடுத்து வரவில்லை ராகுல். இந்த ப்ளேயிங் லெவனில் டிஸ்டர்ப் செய்யப்படாத இடம் ராகுலுக்குதான் அளிக்கப்பட்டுள்ளது. ஓப்பனராக களமிறங்கும் அவர், அவருக்கான இடமாகவே ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சோபிக்காத ராகுல், இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றத்தை தந்திருப்பது இந்திய அணியின் கோப்பை கனவையே தள்ளி வைக்க நேரிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல்: கடைசி ஐந்து போட்டிகளில்:
vs சென்னை சூப்பர் கிங்ஸ் | துபாய் | 98* (42) |
vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | ஷார்ஜா | 39 (35) |
vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | துபாய் | 67 (55) |
vs மும்பை இந்தியன்ஸ் | அபு தாபி | 21 (22) |
vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ஷார்ஜா | 21(21) |
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்