Joe Root : கரை ஒதுங்கிய விராட் அலை... பின் தள்ளிய ஜோ ரூட் என்னும் மலை... 28-வது டெஸ்ட் சதத்துடன் புதிய ரெக்கார்ட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 245 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா(66) மற்றும் ரிஷப் பண்ட்(57) இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.
#ENGvIND | 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்விhttps://t.co/wupaoCQKa2 | #testcricket #INDvENG #cricket #JoeRoot #JonnyBairstow pic.twitter.com/er4bmo6M0z
— ABP Nadu (@abpnadu) July 5, 2022
இந்நிலையில் இன்று 5ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரூட் 76* ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 72* ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் சதம் கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28 வது சதத்தை பதிவு செய்தார்.
A modern-day Great - Joe Root, what an unbelievable consistency since 2021.pic.twitter.com/bZdu696ibQ
— Johns. (@CricCrazyJohns) July 5, 2022
இதன்மூலம் ஜோ ரூட், உலக கிரிக்கெட்டில் தற்போது நவீன கால பேட்ஸ்மேனாக விளங்கி வரும் கோலி, ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். 27 சதங்களுடன் கோலி மற்றும் ஸ்மித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நவீன கால பேட்ஸ்மேன்களில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியல் :
- ஜோ ரூட் - 28
- விராட் கோலி - 27
- ஸ்டீவ் ஸ்மித் - 27
- வில்லியம்சன் - 24
அதேபோல், இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இந்திய அணிக்கு எதிராக 9வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்