(Source: Poll of Polls)
IND vs SL: இன்றைய போட்டியில் சம்பவங்களை செய்ய காத்திருக்கும் ரோகித்! வரிசைகட்டும் சாதனைகள்!
தர்மசாலாவில் இலங்கைக்கு எதிரான இன்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரோகித்சர்மா பல்வேறு புதிய சாதனையை படைப்பார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரை உள்நாட்டில் 16 டி20 போட்டிகளில் ஆடி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித்சர்மா, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மற்றும் நியூசிலாந்தின் கனே வில்லியம்சனுடன் தற்போது உள்ளார். இன்று தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், உள்நாட்டில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற புதிய சாதனையை படைப்பார்.
மேலும் படிக்க : IND vs SL: இலங்கை டி20 தொடரிலிருந்து விலகும் ருதுராஜ் கெய்க்வாட்?! - இதுதான் காரணம்! அவருக்கு பதில் இவரா?
உள்நாட்டில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் இந்திய கேப்டன்களான விராட்கோலியை காட்டிலும் ரோகித்சர்மா 2 வெற்றிகளையும், எம்.எஸ்.தோனியை காட்டிலும் 5 வெற்றிகளையும் அதிகளவில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரை 24 டி20 போட்டிகள் ஆடியுள்ளது. அவற்றில் 22 டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, இந்திய அணி வெற்றி பெறும் மூன்றாவது தொடர் என்ற சாதனையும் படைக்கும். மேலும், இன்று நடைபெறும் போட்டியில் விராட்கோலி 19 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை அடைவார். மேலும், அதிவேகமாக டி20 போட்டியில் 1000 ரன்களை எட்டிய இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைப்பார். கோலி 30 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்