Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப்போங்க".. உக்ரைனில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!
"என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க" என்று உக்ரேனிய மனிதர் ஒருவர் தனது மகளை கட்டிபிடித்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து தற்போது ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில், "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க" என்று உக்ரேனிய மனிதர் ஒருவர் தனது மகளை கட்டிபிடித்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
⚠️#BREAKING | A father who sent his family to a safe zone bid farewell to his little girl and stayed behind to fight ...
— New News EU (@Newnews_eu) February 24, 2022
#Ukraine #Ukraina #Russia #Putin #WWIII #worldwar3 #UkraineRussie #RussiaUkraineConflict #RussiaInvadedUkraine pic.twitter.com/vHGaCh6Z2i
அந்த வீடியோவில், தான் இந்த போரில் உயிருடன் இருப்போமோ இல்லையா என்று தெரியாததால் கடைசியாக தனது மகளை கட்டிபிடித்து தேம்பி தேம்பி அழுகிறார்.
உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகிறது. அதேபோல், ஆண்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக போராடவும் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தாண்டி இன்றும் போர் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் இது போர் அல்ல; சிறப்பு ராணுவ நடவடிக்கையே என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்