Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus: உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளித்து அவர்களை தயார் செய்ய வேண்டும்.
இந்திய அணியின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோசமான பேட்டிங்க்கை பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறது, இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலுக்கு காரணம் என்னவால்க இருக்கலாம் என்பதை இதில் காண்போம்.
இந்திய பேட்டிங் ஆர்டர்:
முந்தைய காலங்களில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்தது, குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் பேட்ஸ்மென்கள் இந்திய அணியை பெரும்பாலான நேரங்களில் காப்பாற்றியுள்ளனர். அதற்குரிய காரணம் என்னவென்றால் அந்த பேட்டிங் ஆர்டரில் அனுபவம் இளமை இரண்டுமே கலந்து தான் இருக்கும்.
2005-2013 வரை இந்திய அணியை எடுத்துப்பார்த்தால் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மண், டிராவிட் போன்ற மூத்த வீரர்களுடன் அப்போது இளம் தலைமுறை வீரர்களாக இருந்த விராட் கோலி, எம்.எஸ் தோனி, ரோகித் சர்மா, அஜிங்கியா ரகானே, செத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் இந்திய அணிக்குள் வந்தனர்.
பல முறை அவர்களுடன் சேர்ந்து விளையாடிய அனுபவம் பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக்கொண்டதால் அப்படிப்பட்ட சீனியர் வீரர்களுக்கு பிறகு இந்திய அணியை தாங்கிச் செல்லும் திறன் மற்றும் திறமை அவர்களிடம் இருந்தது. இதனால் தான் 2015-க்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதித்தது என்றே சொல்லலாம்.
2011 ஆம் ஆண்டு:
இந்திய அணிக்கு பெரிய கண்விழிப்பாக அமைந்தது 2011-12 ஆம் ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் தொடர்கள் தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய என அடுத்தடுத்து இரண்டு தொடர்களில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனது, இந்த தொடர்களில் இந்திய அணி மலை போல் நம்பியிருந்தது அதனுடைய சீனியர் பேட்டர்களான லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர், சேவாக் போன்றோரை தான், இளம் வீரர்களுக்கு அப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: Jasprit Bumrah: என்னாச்சு கேப்டன் பும்ராவிற்கு? அவசர அவசரமாக வெளியேற்றம், காரில் சென்றது எங்கே? ஆஸி., டெஸ்ட் நிலை?
அதன் பிறகு தான் அப்போதைய இந்திய அணி கேப்டன் எம்.எஸ் தோனி இளம் வீரர்களின் பக்கம் திரும்பினார், அந்த பிறகு இந்திய அணி ஒரு மறுகட்டமைப்பு காலத்தில் பயணித்தது, தோனியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேப்டன்சி பதவி விராட் கோலியிடம் வந்தது.
பொற்காலம்:
விராட் கோலியிடம் வந்த பிறது இந்திய டெஸ்ட் அணிக்கு பொற்காலம் என்றே சொல்லாம், ஆஸ்திரேலியாவில் 2 தொடர்களை வென்றது இந்திய அணி, இதுமட்டுமில்லாமல் உள்நாட்டுத்தொடர்களிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியது, இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது இந்திய அணியின் பேட்டர்கள் தான், முரளி விஜய், விராட் கோலி, ரகானே, புஜாரா, விருத்திமன் சாஹா, ரோகித் சர்மா போன்ற வீரர்களின் ஆட்டம் தான் முக்கிய காரணமாக இருந்தது. பந்துவீச்சிலும் இளமை மற்றும் அனுபவத்தை வைத்த இந்திய அணி பயணித்து அதில் வெற்றியை கண்டது.
இதையும் படிங்க: Rohit sharma : 5 மாதம் இருக்கு! இன்னும் ஓய்வு பெறவில்லை.. ரோகித் சர்மா ஓபன் டாக்
மீண்டும் அதே நிலை:
தற்போது இந்திய சந்தித்துள்ளது என்பது 2012ஆம் ஆண்டின் ரீவைண்ட் என்றே சொல்லலாம், காரணம் இந்திய புதிய இளம் பேட்டர்களை அணியில் சேர்த்து அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதும், தங்கள் கேரியரின் கடைசி காலங்களில் இருக்கும் கோலி, ரோகித், ராகுல், ஜடேஜா ஆகியோரையே இன்னும் பேட்டிங்கில் இந்திய அணி நம்பி வந்தது, இந்த தொடரில் அது இந்திய அணிக்கு பெரிய அடியாக விழுந்தது.
பிசிசிஐ தற்போது இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளித்து அவர்களை தயார் செய்ய வேண்டும், வருங்காலத்தை வைத்து அன்று கோலி மற்றும் தோனி எடுத்த முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டும்.