Jasprit Bumrah: என்னாச்சு கேப்டன் பும்ராவிற்கு? அவசர அவசரமாக வெளியேற்றம், காரில் சென்றது எங்கே? ஆஸி., டெஸ்ட் நிலை?
Jasprit Bumrah: இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அவசர அவசரமாக சிட்னி மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
Jasprit Bumrah: சிட்னி டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன ஆச்சு பும்ராவிற்கு?
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கேப்டன் பும்ரா, சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், இன்றைய நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பந்துவீசிக் கொண்டிருந்தபோதே பும்ரா அசவுகரியமாக உணர்ந்தார். இதனால் ஓவரை பாதியிலேயெ நிறுத்திவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு கூட அவர் களத்திற்கு திரும்பவில்லை.
Where's Jasprit Bumrah off to 🤔#AUSvIND pic.twitter.com/P0yD1Q8pnV
— 7Cricket (@7Cricket) January 4, 2025
Jasprit Bumrah has left the SCG: https://t.co/0nmjl6Qp2a pic.twitter.com/oQaygWRMyc
— cricket.com.au (@cricketcomau) January 4, 2025
மருத்துவமனைக்கு விரைந்த பும்ரா
இந்நிலையில், இந்திய அணியின் சீருடையில் இருந்து பயிற்சி உடைக்கு மாறிய பும்ரா அவசர அவசரமாக காரில் ஏறி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவருக்கு என்ன காயம்? என்ன பிரச்சனை? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஏற்கனவே தொடரில் 2-1 என இந்தியா பின்னடவை கண்டுள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதே பும்ரா தான். இந்த சூழலில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். இதையடுத்து, இந்திய அணியை தற்போது விராட் கோலி வழிநடத்தி வருகிறார்.