மேலும் அறிய

Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நெருக்கடியான சூழலில் திணறிக் கொண்டிருந்த இந்திய அணிக்காக சதம் அடித்து அசத்தியுள்ளார் நிதிஷ்குமார் ரெட்டி.

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் சதத்தின் உதவி்யால் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணியின் ரோகித், கோலி, ராகுல். ரிஷப் பண்ட் ஏமாற்றிய நிலையில் ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்தார். 

நிதிஷ்ரெட்டி சதம்:

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இதையடுத்து, இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஜடேஜா 17 ரன்களில் அவுட்டாக, 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டத்தையே மாற்றினர்.  நெருக்கடியான நேரத்தில் பொறுப்புடன் ஆடிய நிதிஷ்குமார் 171 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் சதம் விளாசினார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இன்றயை ஆட்டத்தை நிதிஷ் ரெட்டி - ஜடேஜா தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஜடேஜா 17 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா ஆட்டமிழந்தபோது இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது

காப்பாற்றிய நிதிஷ் - வாஷிங்டன் சுந்தர்:

இதனால், இந்திய அணி ஃபாலாே ஆன் ஆகும் நிலைக்குச் சென்றது. அப்போது இந்திய அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார் ரெட்டியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். வாஷிங்டன் சுந்தர் மிகவும் பொறுமையாக ஆட நிதிஷ் ரெட்டி அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி பாலோ ஆன் ஆகும் அபாயத்தில் இருந்து தப்பித்தது. 

களத்தில் நங்கூரமிட்ட இவர்கள் இருவரையும் பிரிக்க கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், போலந்து, லயன், மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியாேரைப் பயன்படுத்தினார். அவர்களுடன் தானும் பந்துவீசினார். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பொறுமையை இவர்கள் இருவரும் மிகக்கடுமையாக சோதித்தனர். அபாரமாக ஆடிய நிதிஷ் ரெட்டி சதத்தை நோக்கி முன்னேறினார். 

குலசாமியாக மாறிய நிதிஷ்:

மறுமுனையில் நங்கூரமிட்ட வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். நாதன் லயன் சுழலில் அவர் 162 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இந்திய அணி 221 ரன் எடுத்திருந்தபோது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி 348 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியேறினார். 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி இவர்களே ஆவார்கள்.

வாஷிங்டன் சுந்தர் அவுட்டானபோது நிதிஷ் ரெட்டி சதம் அடிக்கும் தருவாயில் இருந்தார். நிதிஷ் ரெட்டி சதம் அடிப்பார் என்ற சூழலில் ரன் எடுக்காமல் பும்ரா அவுட்டானார். 9வது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்கவும், கடைசி விக்கெட்டாக சிராஜ் களமிறங்கினார். 99 ரன்களுடன் பந்துவீச்சாளர் முனையில் நிதிஷ் ரெட்டி நிற்க கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்த சிராஜை அவுட்டாக்கி நிதிஷை சதம் அடிக்க விடாமல் செய்ய முயற்சித்தார். ஆனால், முகமது சிராஜ் கம்மின்ஸ் வீசிய 3 பந்துகளையும் மிகவும் லாவகமாக தடுத்தார். 

இதையடுத்து போலந்து வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து நிதிஷ்குமார் ரெட்டி சதம் விளாசினார். சதம் விளாசிய அவரை மைதானத்தில் நின்ற அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர். மேலும் இந்திய அணி 350 ரன்களை கடந்தது. பின்னர், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இந்திய அணி முதல் இன்னிங்சில் தற்போது 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களுடன் ஆடி வருகிறது. நிதிஷ் ரெட்டி 176 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 105 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்த நிதிஷ்குமார் ரெட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Embed widget