CPL T20 Kieron Pollard: பொளந்து கட்டிய பொல்லார்ட்.. கதி கலங்கிய கரீபியன் லீக்!
சிபிஎல் தொடரில் செயின்ட் லூசியா அணிக்கு எதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கேப்டன் கெய்ரோன் பொல்லார்ட் 4 சிக்சர்களை விளாசி அசத்தி இருக்கிறார்.
கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா அணிக்கு எதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கேப்டன் கெய்ரோன் பொல்லார்ட் 18வது ஓவரில் 4 சிக்சர்களை விளாசி அசத்தி இருக்கிறார்.
கரீபியனில் கலக்கிய பொல்லார்ட்:
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெய்ரோன் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது எதிரணி வீரர்கள் இவரது ஆட்டத்தை பார்த்து கதிகளங்குவார்கள். அந்த அளவிற்கு கடைசி நேரத்தில் அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி இவர் களத்தில் இறங்கினார்ல் பீல்டிங்க் செட்டப்பை வேறு விதமாக மாற்றுவார்.
அந்த அளவிற்கு ஐபிஎல்லில் மிரட்டியவர் கெய்ரோன் பொல்லார்ட். ஐபிஎல்லில் எப்படி விளையாடினாரோ அதைபோல் கரீபியன் தொடரிலும் விளையாடி வருகிறார்.
இச்சூழலில் தான் கரீபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்ட் மிரட்டல் சம்பவம் ஒன்றை செய்து அசத்தி இருக்கிறார். சிபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 3 சிக்ஸ் உட்பட 26 பந்துகளில் 34 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் ராஸ்டன் சேஸ் 40 பந்துகளில் 56 ரன்களையும், சார்லஸ் 14 பந்துகளில் 29 ரன்களையும் விளாசினர்.
ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்:
Kieron Pollard is awarded @Dream11 MVP! Well done Polly 🙌🏾 #CPL24 #SLKvTKR #CricketPlayedLouder #BiggestPartyInSport #Dream11 pic.twitter.com/AASf9KO7mC
— CPL T20 (@CPL) September 11, 2024
இதன்பின் 188 ரன்கள் என்ற இலக்குடன் டிகேஆர் அணியின் ஜேசன் ராய் - சுனில் நரைன் கூட்டணி களமிறங்கியது. சுனில் நரைன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பவர்ப்ளேயிலேயே சிறப்பான ரன்னை அந்த அணி எட்டியது.
தொடக்க ஆட்டக்காராரக களம் இறங்கிய ஜேசன் ராய் 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பூரன் 17 ரன்களிலும், கார்டி 15 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாரிஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டிரின்பாகோ அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில் நிலவியது. இச்சூழலில் தான் களம் இறங்கினார் கெய்ரோன் பொல்லார்ட்.அந்தவகையில் 19 வது ஓவரை செயின்ட் லூசியா அணி வீரர் போர்ட் வீசினார். அதில் முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை.
இரண்டாவது பந்து சிக்ஸருக்கு பறக்க மூன்றாவது பந்தும் ரன் எடுக்க முடியாமல் போனது. ஆனால் அடுத்த மூன்று பந்துகளில் தான் சம்பவம் நடந்தது. அதாவது அடுத்த மூன்று பந்துகளையும் களத்தில் நின்ற பொல்லார்ட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அந்தவகையில் ஒரே ஓவரில் 24 (0,6,0,6,6,6) ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது டிரின்பாகோ அணி. அந்தவகையில் 19 பந்துகளை மட்டுமே சந்தித்த பொல்லார்ட் 52 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.