BCCI Awards: அஸ்வினுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது - பி.சி.சி.ஐ. கௌரவப்படுத்திய வீரர்கள் யார்? யார்?
BCCI Awards: ரவிச்சந்திர அஸ்வின், ரவிசாஸ்திரி உள்பட கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் வீரர்கள் உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வந்ததாலும் வீரர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வழங்கப்பட்டது.
பி.சி.சி.ஐ. விருதுகள்:
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 - 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது. 2020 - 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Presenting the winners of the Dilip Sardesai Award 🏆
— BCCI (@BCCI) January 23, 2024
🔹Most wickets in Test Cricket - 2022-23 (India vs West Indies) 👉 R Ashwin
🔹Most runs in Test Cricket - 2022-23 (India vs West Indies) 👉 Yashasvi Jaiswal#NamanAwards | @ashwinravi99 | @ybj_19 pic.twitter.com/cHTCRao7AU
2021 - 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022- 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது இளம் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டிலேயே சிறப்பாக விளையாடி முத்திரை பதித்த வீரர்களுக்கு பெஸ்ட் இண்டர்நேஷ்னல் டெப்யூட் விருது வழங்கப்பட்டது. அதில் 2019-2020ஆம் ஆண்டில் மயாங்க் அகர்வாலுக்கும், 2020 - 2021ஆம் ஆண்டுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டரான அக்ஸர் பட்டேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டுக்கு ஸ்ரேயஸ் ஐயருக்கும் 2022 - 2023ஆம் ஆண்டுக்கு ஜெய்ஸ்வாலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான விருதுகள்
வீராங்கனைகளுக்கான விருதுகளில் கடந்த 2020 -2021ஆம் ஆண்டு முதல் 2021-2022ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீராங்கனை விருது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரமாக பார்க்கப்படும் ஸ்மிருதி மந்தனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2019 - 2020 ஆண்டு மற்றும் 2022- 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீராங்கனை விருது இந்திய மகளிர் அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
It’s now time to reward the on-field brilliance of #TeamIndia Women at the international stage 👏👏
— BCCI (@BCCI) January 23, 2024
🔹Most wickets in ODIs
🔹Highest Run-Getter in ODIs#NamanAwards pic.twitter.com/c4XSdJUxeI
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கான விருதுகளில், 2019 - 2020ஆம் ஆண்டுக்கான விருது பிரியா புனியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020 - 2021ஆம் ஆண்டுக்கான விருது ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 - 2022ஆம் ஆண்டுகளில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய வீராங்கனை என்ற விருதினை ஷ்ப்பினேனி மேகனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022 -2023ஆம் ஆண்டுக்கான விருது அமன்ஜோட் கவுருக்கு வழங்கப்பட்டுள்ளது.