விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !
Virudhunagar : பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வழித்தட மாறுதல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக -விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் முதல் நந்தா ஹோட்டல் முதல் ஆத்துப்பாலம் வரை பயணிகள் பேருந்து (அரசு மற்றும் தனியார் பேருந்து) No-entry ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
போக்குவரத்து மாற்றம்
விருதுநகர் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நந்தா ஹோட்டல் சர்வீஸ் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், இராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் மீனாம்பிகை பங்களா வழியாக வரும் மதுரை- சிவகாசி பேருந்துகளும் டி.டி.கே ரோடு,ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மேற்கு மற்றும் தெற்கு செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சாலை வழியாக செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: களத்திற்கு வந்த கோத்ரேஜ்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. சென்னை, செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்..
சிரமம் குறையும்
மாவட்ட ஆட்சியர் தகவல்

