Women's T20 World Cup:மகளிர் டி20 உலக கோப்பை; நியூசிலாந்து வீராங்கனை செய்த சாதனை! என்ன?
இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று (அக்டோபர் 20) நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகல் மோதின். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து அணி.
நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியத் மூலம் நியூசிலாந்து அணி வீராங்கனை அமெலியா கெர் இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சூழலில், இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் யார் என்பதை இங்கே பார்ப்போம்:
அமெலியா கெர் - 2024 இல் 15 விக்கெட்டுகள்:
நியூசிலாந்து அணி வீராங்கனை அமெலியா கெர் தான் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதாவது மொத்தமாக அவர் 15 விக்கெட்டுகளை இந்த டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றி இருக்கிறார். இவரது சராசரி 7.33.
அன்யா ஷ்ருப்சோல் - 2014 இல் 13 விக்கெட்டுகள்:
முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷ்ருப்சோல் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற போட்டியில் அவர் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.ஷ்ருப்சோல் 7.53 சராசரியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இறுதியில் போட்டியின் சிறந்த வீரர் விருதை வென்றார். அவரது ஆறு ஆட்டங்களில் ஐந்தில் குறைந்தது இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததால் அவரது எக்கனாமி 4.08 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேகன் ஷட் - 2020 இல் 13 விக்கெட்டுகள்:
ஷ்ரப்சோலைப் போலவே, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட்டும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2020 ஆம் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இவரது சராசரி 10.30. இறுதிப் போட்டியில் மெட்ச் வின்னிங்கிற்கு முக்கிய பங்காற்றினார்.
நோன்குலுலெகோ மலாபா - 2024ல் 12 விக்கெட்டுகள்:
தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனை நோன்குலுலெகோ மலாபா அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஆறு ஆட்டங்களில் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வந்த நான்கு விக்கெட்டுகளையும் சேர்த்து இவரது எக்கனாமி 5.66 ஆக உள்ளது.