CWG 2022 Day 10 Schedule: இறுதிப்போட்டியில் தங்கம் வெல்லுமா இந்திய மகளிர் அணி.. இன்றைய இந்தியாவின் போட்டிகள் இதுதான்! களமிறங்கப் போவது யார்? யார்?
காமன்வெல்த் போட்டியில் இன்றைய 10வது நாளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மோதும் போட்டி அட்டவணையை கீழே விரிவாக காணலாம்.
காமன்வெல்த் போட்டியின் நேற்றைய 9வது நாள் இந்தியாவிற்கு மிக சிறப்பான நாளாக அமைந்தது. நேற்று மட்டும் இந்தியா 4 தங்கம் உள்பட 14 பதக்கங்களை அள்ளியது. ஒட்டுமொத்தமாக 40 பதக்கங்களை இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் இன்றைய 10வது நாளில் தங்கப் பதக்கப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதே சமயம் மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பேட்மிண்டனில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் அவரவர் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட இருக்கின்றனர்.,அதே நேரத்தில் நிது கங்காஸ், அமித் பங்கல் மற்றும் நிகத் ஜரீன் போன்றவர்கள் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் இறுதிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.
டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் ஷரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளனர். அதுபோல, இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மோதும் 10வது நாள் போட்டி அட்டவணையை கீழே விரிவாக காணலாம்.
இன்றைய நாளில் இந்தியா பங்கேற்கும் போட்டி விவரம் :
ஹாக்கி (1:30 PM) :
- இந்தியா vs நியூசிலாந்து (பெண்களுக்கான வெண்கலப் பதக்கப் போட்டி)
பேட்மிண்டன் (பிற்பகல் 2:20) :
- பி.வி.சிந்து - பெண்கள் ஒற்றையர் அரையிறுதி
- கிடாம்பி ஸ்ரீகாந்த் - ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி (பிற்பகல் 3.10)
- லக்ஷ்யா சென் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி (பிற்பகல் 3.10)
- ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் பெண்கள் இரட்டையர் அரையிறுதி (மாலை 4 மணி)
- சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆடவர் இரட்டையர் அரையிறுதி (மாலை 4.50 மணி)
தடகளம் (பிற்பகல் 2:45) :
- ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பைனல் - அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால், பிரவீன் சித்திரவேல்
- ஆண்களுக்கான 10 கிமீ பந்தய நடை இறுதிப் போட்டி - அமித், சந்தீப் குமார் (பிற்பகல் 3.50)
- பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி - ஷில்பா ராணி, அன்னு ராணி (மாலை 4.05)
- பெண்களுக்கான 4x100மீ இறுதிப் போட்டி (மாலை 5.24)
- ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி - ரோஹித் யாதவ், டிபி மனு (காலை 12.10)
- ஆண்கள் 4x400மீ இறுதிப் போட்டி (காலை 1 மணி)
குத்துச்சண்டை : அனைத்து இறுதிப் போட்டிகள் - (பிற்பகல் 3 மணிக்கு பிறகு)
- நிது கங்காஸ், அமித் பங்கல் (பிற்பகல் 3.15)
- நிகத் ஜரீன் (இரவு 7 மணி), சாகர் அஹ்லாவத் (மதியம் 1.15)
டேபிள் டென்னிஸ் (பிற்பகல் 3:35) :
- ஸ்ரீஜா அகுலா - வெண்கலப் போட்டி
- சரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் தங்கப் போட்டி (மாலை 6.15)
- சரத் கமல் எஸ்.எஃப் (இரவு 9.50)
- சத்தியன் ஞானசேகரன் எஸ்.எஃப் (இரவு 10.40)
- சரத் கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா (12.15) மாலை)
கிரிக்கெட் (9:30 PM) :
- இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதி (இரவு 9.30)
ஸ்குவாஷ் (பிற்பகல் 10:30) :
தீபிகா பல்லிகல் மற்றும் சௌரவ் கோசல்- வெண்கலப் போட்டி