IPL 2021: பாலாஜியை தொடர்ந்து மைக் ஹஸ்ஸிக்கும் கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லட்சுமிபதி பாலாஜியை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற்று வந்தன. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கர வர்த்தி, சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதன், பேருந்து கிளீனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஒட்டுமொத்த சென்னை அணியும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரித்திமான் சாஹா ஆகியோருக்கும் கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லி மட்டும் ஹைதராபாத் அணி வீரர்களும் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியம், நிலைமையை முன்னிட்டு மேற்கொண்ட அவசர ஆலோசனையில் ஐபிஎல் 2021 தொடரை உடனடியாக ஒத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் ஐபிஎல் ஏற்பாட்டு குழுவின் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

UPDATE: The Indian Premier League Governing Council (IPL GC) and Board of Control for Cricket in India (BCCI) in an emergency meeting has unanimously decided to postpone IPL 2021 season with immediate effect.

Details - https://t.co/OgYXPj9FQy pic.twitter.com/lYmjBId8gL
— IndianPremierLeague (@IPL) May 4, 2021

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹஸிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என தெரியவந்தது. எனினும், மீண்டும் அவரது மாதிரிகள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் பின்னரே எதையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆஸ்திரேலிய வீரரான ஹசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: IPL CSK ipl 2021 Mike Hussey mike hussey tests posiive michael hussey tests positive chenai super kings laxmipathy balaji

தொடர்புடைய செய்திகள்

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..?

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..?

Euro 2020: 'Drink Water' : கோகோ கோலாவுக்கு நோ சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

Euro 2020: 'Drink Water' : கோகோ கோலாவுக்கு நோ சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

WTC 2021 Update: உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார்? - "கிங்" கோலியா? "கூல்" வில்லியம்சனா?

WTC 2021 Update: உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார்? -

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!