மேலும் அறிய

தியாகராஜர் கோயிலின் பழமை வாய்ந்த ஓவியங்கள்; பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்

தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பழைய மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைய வேண்டும்.

தியாகராஜர் கோயிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலக புகழ் பெற்ற தியாகராஜர் கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகிறது. இந்த கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது. தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத அளவு தொன்மை வாய்ந்த கோவிலாக விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில் கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோயிலின் சிறப்பாக கோயில் ஐந்து வேலி குளம் ஐந்து வேலி செங்கல் நீரோடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்றதாகவும் மேலும் இந்த கோவிலின் வடிவத்தைப் பார்த்து தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது என்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் கருங்கல் திருப்பணிகள்  என்ற வரலாறும் உண்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேவாசிரியன் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் தேவர்கள் சிவபூஜை செய்யும் இடமாகவும் கோயிலுக்கு வருபவர்கள் தேவாசிரியன் மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோயிலுக்குள் உள்ளே செல்வார்கள் என்பது ஐதீகம் இந்த மண்டபத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தியாகராஜர் கோயிலின் பழமை வாய்ந்த ஓவியங்கள்; பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்

இந்த மண்டபத்தில் ஒட்டு மொத்தம் 96 ஓவியங்கள் உள்ளன குறிப்பாக தியாகராஜர் தேவலோகத்திலிருந்து தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம் யானை வாகனம் ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாணவேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட 96 வகையான ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டது. இந்நிலையில் 1988ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் செய்த பொழுது இந்த ஓவியங்கள் பழுதடைந்தன. பின்னர் தனிநபர் ஒருவர் தற்போதைய பெயிண்ட்களை பயன்படுத்தி பழுதடைந்த ஓவியங்களை சரி செய்ததற்கு பக்தர்களும் பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து சமய அறநிலைத்துறை பழைய மூலிகைகளை கொண்டு ஓவியங்களை வரைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஓவியங்கள் வரையும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போதுவரை தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பழைய மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைய வேண்டும். அதுமட்டுமின்றி தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் எடுத்து அதன் வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தியாகராஜர் கோயிலின் பழமை வாய்ந்த ஓவியங்கள்; பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்தல்

மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலின் அனைத்து கோபுரங்களிலும் மர கிளைகள் காணப்பட்டு வருகின்றன. இதனால் கோபுரங்கள் சிதலமடையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி கோவிலை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை பயன்படுத்தி பல நபர்கள் குடியிருப்புகளை கட்டி வருகின்றனர். ஏற்கனவே கோவில் மண்டபம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுச்சுவரும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆகவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி கோவிலின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget