20 ஆண்டுக்குப் பின் நடந்த திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நிறைவு
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி திருத்தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை கிராமத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமலைராயப் பெருமாள் திருக்கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி திருத்தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.
Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?
கடந்த மே 12ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருத்தேரோட்ட விழாவை முன்னிட்டு நாள்தோறும் மண்டகப்படி, உற்சவர் திருக்கல்யாணம், சுவாமி ரதம் ஏறுதல், தேர் அடிபெயர்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக திருமலைப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். நிலையில் இருந்து அடிபெயர்ந்து நிறுத்தப்பட்ட திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக இழுத்துச் செல்லப்பட்டது.
Breaking News LIVE: மக்களவை 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு - காலை 9 மணி நிலவரம் இதோ!
இரண்டு நாள் நடக்கும் திருத்தேரோட்டத்தின் முதல் நாளான 23ம் தேதி அன்று தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக சென்ற தேர் கோம்பை ரெங்கநாதர் கோயில் முன்பாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைய 24ம் தேதி நேற்றைய தினம் மாலை அங்கிருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி வழியாக கிழக்கு ரத வீதியில் வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது.
இந்த திருத்தேரோட்டத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், உத்தமபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு கோலாகலமாக நடந்த இந்த தேர்த்திருவிழா வரும் காலங்களிலும் இதேபோல் நடத்தப்படும் என கோம்பை ஜமீன்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.