Breaking News LIVE: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு.. மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகின்றனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த, அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில், நேற்று முதல் வார இறுதி நாட்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு எளிதாக செல்லும் வகையில் கூடுதலாக 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in என்ற இணையதளத்திற்குச் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
6 மணி நிலவரம்.. மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
6 மணி நிலவரப்படி, 6ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 58.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கம் போல், மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது.
அரைக்கவிட்டால்தான் தெரியும் : விஞ்ஞானி வெங்கடேஸ்வரனின் சிறப்பான பேச்சு
"அம்மியில் அரைத்தால்தான் சூப்பரான சமையல் கிடைக்கும் என்று சொல்பவர்களை அரைக்கவிட்டால்தான் புரியும்.. கண்மூடித்தனமான பழமை மோகம்.."
சென்னை தரமணியில் நடந்த அறிவியல் நிகழ்ச்சியில் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேச்சு.
Breaking News LIVE: சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை
Breaking News LIVE: சென்னையில், மாலை சுமார் 6 மணியிலிருந்து பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 2024: 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
VIDEO | Lok Sabha Elections 2024: EVMs being sealed at a polling booth in Bihar's Sheohar as sixth phase of polling concludes. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024
— Press Trust of India (@PTI_News) May 25, 2024
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/XidkOw32RP
Breaking News LIVE: மக்களவை தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு: 5 மணி நிலவரப்படி 57.70% பதிவு
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதில், 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 53.73%, உத்தரபிரதேசத்தில் 52.02%, மேற்குவங்கத்தில் 77.99%, ஜம்மு &காஷ்மீரில் 51.35 %, ஒடிசாவில் 59.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.