மேலும் அறிய

Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?

சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தை குடியிருப்புக்கு ரூ.500 , இதர பயன்பாட்டுக்கு ரூ.1000 என நிர்ணயித்து வசூலிக்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு

சொத்து வரி - நிர்வாகத் துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தை குடியிருப்புக்கு ரூ.500 , இதர பயன்பாட்டுக்கு ரூ.1000 என நிர்ணயித்து வசூலிக்க நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், சொத்துகள் பரிமாற்றத்துக்குப் பின் சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தனித் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.

இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு வந்த நிலையில் , தொகையை ஒரே சீராக நிர்ணயிப்பது தொடர்பாக கடந்த 16-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கை ;

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரியாக குடியிருப்பு பயன்பாட்டுக்கு ரூ.500 மற்றும் பிற பயன்பாடுகளுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். மேலும் , குடிநீர் கட்டண விதிப்பு

எண்களுக்கு பெயர் மாற்றக் கட்டணம் எக் காரணம் கொண்டும் வசூலிக்கக் கூடாது. சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட சொத்து வரி விதிப்பு எண்களுக்குரிய குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு எண்களையும் உரிய உரிமையாளர் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் உடனே மாற்றம் செய்ய வேண்டும்.

சொத்து வரி பெயர் மாற்றம் கோரும் மனுக்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலித்து பெயர் மாற்றம் செய்து , முடிவுற்ற அரையாண்டில் அவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Anbil Mahesh Case:
Anbil Mahesh Case: "ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது?" அன்பில் மகேஷ் வழக்கில் ஐகோர்ட் சரவெடி!
சென்னைக்கு வெள்ள அபாயமா? பள்ளிக்கரணை மதில் சுவரை இடிக்க வேண்டும் - அன்புமணி எச்சரிக்கை!
சென்னைக்கு வெள்ள அபாயமா? பள்ளிக்கரணை மதில் சுவரை இடிக்க வேண்டும் - அன்புமணி எச்சரிக்கை!
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget