Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?
chennai weather report today : " சென்னையை பொருத்தவரை இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலான இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் "
![Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை? today weather forecast chennai kanchipuram and chengalpattu Where is it chance to rain full details tnn Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/d366566e78169272d7ee825ff86b6b631716607245304113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
செங்கல்பட்டு , காஞ்சிபுரம் வானிலை நிலவரம் எப்படி உள்ளது ?
கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் ( kanchipuram weather report ) , செங்கல்பட்டு ( Chengalpattu weather report ) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தெளிவாக காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வாரம் அபபொழுது மேகமூட்டத்துடன், பகல் மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதிகளில் அவ்வப்பொழுது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. சில நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
இன்று எதிர்பார்க்கப்படும் வானிலை ?
இன்று வானம் தெளிவாக காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34.00 - 35.00 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 26.00 -27.00 டிகிரி செல்சியஸ் ஆகும் காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 68 சதவீதமாகவும் மற்றும் காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 70% ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 5 கிலோமீட்டர் ஆகும் மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் ஆறு மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ,தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னையை பொருத்தவரை இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலான இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று 14 மில்லி மீட்டர் வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது.
காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 84 சதவீதமும் குறைந்தபட்சமாக 64 சதவீதமும் பதிவாகும். காற்று மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)