புரட்டாசி முதல் சனிக்கிழமை; தேனி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன. பக்தர்களுக்கு துளசி, பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டன .
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கு என ஒரு விசேஷ நாள் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமலை வணங்குவது வழக்கத்தில் தொடர்ந்து வருகிறது. திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கு சென்று பெருமாளை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேச பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்ட சொல்லி பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேச பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வது உண்டு. துளசி தங்களால் பெருமாளை அச்சுப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கு இட்டு பூஜை செய்வதனால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து மாவினால் விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும் . பெருமாள் படத்தின் முன்னர் இப்படி நெய்திபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி வீட்டில் செல்வ செழிப்பும் ஏற்படும் என்பது தொடர்ந்து வரும் ஐதீகம்.
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
இன்று புரட்டாசி சனிக்கிழமை நாள் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பிரிசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போடி அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், பெரியகுளம் பகுதியில் உள்ள மலை உச்சியின் மேல் அமைந்திருக்கும் கூடல் அழகர் பெருமாள் கோவில், கம்பம் அருகே உள்ள சுயம்பு வடிவ பெருமாள் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு செல்லும் காசி விஸ்வநாதர் கோவில், சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் அமையப்பெற்றிருக்கும் கம்பம் காசி விஸ்நாத கம்பரயபெருமாள் கோவில் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் போடி பெருமாள் கொவிலில் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற போடியில் சுமார் 700 ஆண்டுகளுக்கு பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு இன்று புரட்டாசி மாதம் முதல் சனி முன்னிட்டு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன. பக்தர்களுக்கு துளசி, பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்