மேலும் அறிய

Navaratri 2023: முதல் முறையா கொலு வைக்க போறிங்களா? எந்த படியில் எந்த பொம்மையை வைப்பதென பார்க்கலாம்....

நவராத்திரிக்கு முதல் முறையாக கொலு வைக்க போறிங்களா? அப்போ இந்த பாதிவு உங்களுக்காக தான். கொலு பொம்மையை எப்படி அடுக்குவதென்று பார்க்கலாம்.

அலை மகள், கலை மகள், மலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம். இந்தாண்டு நவராத்திரி திருவிழா, அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். வீட்டில் கொலுவைத்து படையல் போடுவார்கள். நவராத்திரி விழாவின் 9 நாட்களும் மிக சிறப்பாக இருக்கும். 

கொலு வைப்பதை பலரும் பாரம்பரியமாக வைத்துள்ளனர். வழக்கமாக கொலு வைப்பவர்களுக்கு எந்த முறையில் கொலு வைக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால்,  புதிதாக தங்களின் வீட்டில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை கொலு வைக்கலாம். 
படிப்படியாக மனிதனின் வாழ்க்கை எப்படிஉயர்ந்தது என்றும், உலகில்  எப்படி படிப்படியாக  உயிரினங்கள் தோன்றியது என்றும்,   மனிதன் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும்  இந்த கொலு படிகள் அமைவாதாக சொல்லப்படுகிறது. 

கொலு பொம்மை எந்த வரிசையில் அடுக்குவது?

இங்கு கொலு பொம்மைகளை வைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். கொலு படியின் ஒவ்வொன்றிலும், ஓரறிவு,ஈரறிவு, மூவறிவு உயிரினங்கள் என வரிசையாக அடுக்குவது அவசியம்.

முதல் படி:
ஓரறிவு உயிரினங்கள்: கொடி, செடி, மரம்  ஆகியவை ஓரறிவு உயிரினங்கள். இவற்றை முதல் படியில் அடுக்க வேண்டும்.

இரண்டாம் படி:
ஈரறிவு உயிரினங்கள்: நத்தை, சங்கு உள்ளிட்டவை ஈரறிவு உயிரினங்கள். இவற்றை இரண்டாம் படியில் அடுக்க வேண்டும். 

மூன்றாம் படி:
மூவறிவு உயிரினங்கள்: எறும்பு, கரையான் உள்ளிட்டவை மூன்றறிவு உயிரினங்கள். இனவே இவற்றை மூன்றாம் படியில் அடுக்க வேண்டும். 

நான்காம் படி:
நான்கறிவு உயிரினங்கள்: வண்டு, நண்டு உள்ளிட்டவைக்கு 4 அறிவு. இவற்றை நான்காம் படியில் அடுக்க வேண்டும்

ஐந்தாம் படி:
ஐந்தறிவு உயிரினங்கள்: பறவைகள், விலங்கினங்கள் ஐந்தறிவு உயிரினங்கள். இவற்றை 5ஆம் படியில் வைக்க வேண்டும். 

ஆறாம் படி:
ஆறறிவு உயிரினம்:  மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், கடை வியாபாரம் செய்வது போல, நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகளை ஆறாம் படியில் வைக்கலாம். 

ஏழாம் படி:
மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை அடுத்த படியில் வைக்கலாம். வள்ளலார், மகாத்மா காந்தி, உள்ளிட்டோரின் பொம்மைகளை ஏழாம் படியில் வைக்கலாம். 

எட்டாம் படி:
பகவானின் அவதாரங்களை வைக்கலாம். அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள், தசாவதாரம் உள்ளிட்ட பொம்மைகளை வைக்கலாம்.

ஒன்பதாம் படி:
ஒன்பதாம் படியில்,  பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவிகளின் பொம்மைகளையும், பிள்ளையார் பொம்மையையும் வைக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget