மேலும் அறிய

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் 132ம் தீமிதி திருவிழா - திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலைவைத்து அப்பகுதி பொதுமக்கள் நூற்றாண்டுகள் கடந்து  வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Guru Peyarchi Palan: 2024-ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி.. மேஷம் முதல் மீனம் வரை! செல்வம் செழிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் 132ம் தீமிதி திருவிழா - திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீப்பாய்ந்தாள் அம்மன் நினைவாக இக்கோயில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 132 -ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தன. அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Masi Magam 2024: திருக்கோட்டியூரின் மாசி மகக் கொண்டாட்ட தெப்பத் திருவிழா சிறப்பு குறித்து தெரியுமா ? - வாங்க பார்க்கலாம் !

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் 132ம் தீமிதி திருவிழா - திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்த கோயிலில் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதியில் மக்களின் பெரும் நம்பிக்கை என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீமிதித்து பிராத்தனையை நிறைவேற்றினர். மேலும், இவ்விழாவில் சுற்றுவட்டார பகுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோயில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.

நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget