மேலும் அறிய

Bakrid: இஸ்லாமிய குழந்தைகளை முத்தமிட்டு, அவர்களுடன் பக்ரீத் கொண்டாடிய எம்.பி சுதா..

மயிலாடுதுறை அருகே நீடூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா பங்கேற்று குழந்தைளை தூக்கி கணத்தில் முத்தமிட்டு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தார்

மயிலாடுதுறை அருகே நீடூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டு ஈடுபட்ட சிறப்பு தொழுகையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா பங்கேற்று குழந்தைளை தூக்கி கணத்தில் முத்தமிட்டு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பக்ரீத் பண்டிகை 

இஸ்லாமிய பண்டிகைகளின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் - மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Bakrid: இஸ்லாமிய குழந்தைகளை முத்தமிட்டு, அவர்களுடன் பக்ரீத் கொண்டாடிய எம்.பி சுதா..

இரண்டாயிரம் பேர் கலந்துக்கொண்டு சிறப்பு தொழுகை 

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் பாசில் பாக்கவி தலைமையில் அப்துல் காதர் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இத்தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு‌ வாழ்வில் வளமோடு, ஒற்றுமை உணர்வோடும், சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர், தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

Aavin Milk: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியிலும் ஆவின் நிறுவனம் மகத்தான சாதனை!

Bakrid: இஸ்லாமிய குழந்தைகளை முத்தமிட்டு, அவர்களுடன் பக்ரீத் கொண்டாடிய எம்.பி சுதா..

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

இச்சிறப்பு பக்ரீத் தொழுகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா கலந்து கொண்டு தொழுகை செய்தார். தொடர்ந்து தொழுகைக்கு வந்திருந்த குழந்தையை தூக்கி கணத்தில் முத்தமிட்டும்  இஸ்லாமியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதேபோல் மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!

Bakrid: இஸ்லாமிய குழந்தைகளை முத்தமிட்டு, அவர்களுடன் பக்ரீத் கொண்டாடிய எம்.பி சுதா..

இதேபோன்று சீர்காழி, திருமுல்லைவாசல், மேலச்சாலை, கொள்ளிடம், வடகால், வடகரை, அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், நீடூர், கிளியனூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது, இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

National Award To Teachers 2024: இன்னும் சில நாட்கள்தான்; நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இப்படித்தான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
Embed widget