search
×

ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!

ITR 2024 Profile: வருமான வரி கணக்கு தளத்தில் பயனாளர்கள் தங்களது சுய விவரங்களை, புதுப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

FOLLOW US: 
Share:

 ITR 2024 Profile: வருமான வரி கணக்கு தளத்தில் பயனாளர்கள் தங்களது புகைப்படம், கைப்பேசி எண் மற்றும் முகவரி போன்ற சுய விவரங்களை, புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி கணக்கு தாக்கல் 2024:

2023-24 நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், வரி செலுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி, உங்கள் தனிப்பட்ட விவரங்களை சூழலுக்கு ஏற்ப போர்ட்டலில் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். கடந்த காலத்தில் ITR (IT Return Filing) தாக்கல் செய்யும் நேரத்தில் இருந்த,  உங்களது முகவரி மற்றும் கைபேசி எண் போன்ற விவரங்கள் இப்போது மாறியிருக்கலாம். அப்படியானால், மாற்றப்பட்ட தகவல்கள் சரியான நேரத்தில் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

வருமான வரி தளத்தில் என்ன விவரங்களைப் புதுப்பிக்கலாம்?

வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் ( https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login ) உள்நுழைந்து உங்கள் புகைப்படம், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட சில விவரங்களைப் புதுப்பிக்கலாம். இந்த விவரங்களை எனது சுயவிவரம்/புதுப்பிப்பு சுயவிவர விருப்பங்களின் கீழ் புதுப்பிக்கலாம். பான், டான், ஆதார் எண். மொபைல் எண், இ-மெயில் ஐடி மற்றும் முகவரியை வங்கி விவரங்கள் மூலம் புதுப்பிக்கலாம்.

சுய விவரங்களை புதுப்பிப்பது எப்படி?

  •  முதலில், https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login வழியாக வருமான வரி போர்ட்டல் உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லவும்
  • பயனர் ஐடி (PAN), கடவுச்சொல் மூலம் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்
  • முகப்புப் பக்கத்தில், உங்கள் பெயர் மேல் வலதுபுறத்தில் தோன்றும். அதைக் கிளிக் செய்தால்  மெனு திறக்கும். அதில் எனது சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும். இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்
  • புதிய பக்கத்தின் மேல் இடதுபுறத்தில் உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் தோன்றும். உங்கள் புகைப்படம் இல்லை என்றால், அல்லது பழைய புகைப்படம் இருந்தால், நீங்கள் கேமரா ஐகானைக் கிளிக் செய்து புதிய புகைப்படத்தைப் பதிவேற்றலாம்
  • குடியுரிமை, முகவரி, பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கலாம்
  • உங்கள் வருமான ஆதாரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், டீமேட் கணக்கு விவரங்கள் போன்றவற்றையும் இந்தப் பக்கத்தில் புதுப்பிக்கலாம்.

ஆதார், பான் மூலம் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்

  •  இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள எனது சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்
  • அங்கு தொடர்பு விவரங்கள் தோன்றும், அதற்கு அடுத்ததாக ஒரு திருத்து பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்யவும்
  • உங்கள் ஆதார், பான் அல்லது வங்கிக் கணக்கின்படி உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்
  • நீங்கள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அங்கீகாரத்திற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு OTP அனுப்பப்படும்
  • அங்கு 6 இலக்க OTP ஐ உள்ளிடவும்
  • வங்கி விவரங்கள் மூலம் அப்டேட்டை முடிக்க விரும்பினால், உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிடவும்.
  • இது இ-ஃபைலிங் போர்ட்டலில் புதுப்பிப்பு செயல்முறையை நிறைவு செய்கிறது.

விவரங்களைப் புதுப்பித்த பின்னரே வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பது நல்லது. ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை இறுதி வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published at : 17 Jun 2024 11:34 AM (IST) Tags: INCOME TAX\ it return ITR 2024 itr Profile

தொடர்புடைய செய்திகள்

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

டாப் நியூஸ்

பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு

பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!

AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!

AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.