மேலும் அறிய

சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 350 -க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். 

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 350 -க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மாங்கல்ய பலம் நிலைக்கவும், குழந்தை பேறு பெறவும், திருமணவரம் வேண்டியும்  வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலின் சிறப்பும், வரலாறும்.

மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை நகரத்தில் புகழ்பெற்ற ஒரு கோயில் தான் இந்த மாயூரநாதர் கோயில். பார்வதி தேவியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதி தேவியை யாகத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றுள்ளார். அதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், தன் சொல்லை மீறி யாகத்திற்கு சென்றதால் அம்பாள் பார்வதி தேவியை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் சாபம் இட்டார். அதனால் மயிலாக மாறிய அம்பாள் பார்வதி இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் தந்து அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவபெருமான் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் இவ்வாலயத்தில் உள்ள சிவன் மாயூரநாதர் என பெயர் பெற்றார். இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோயில் இதுவாகும். 

சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை

பாவங்கள் போக்கும் கோயில்

செய்த பாவங்களுக்கு இங்குள்ள துலா கட்ட காவேரியில் நீராடி மயில் வடிவத்தில் சிவனை நோக்கி வணங்கி இருக்கும் அம்பாளையும், சிவனையும் தரிசித்தால் செய்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது இக்கோயிலில் ஐதீகம். மேலும் நந்தியின் கர்வத்தை சிவபெருமான் நீக்கிய இடமாகவும், மற்றும் கங்கை உள்ளிட்ட புனிய நதிகள் இங்கு நீராடி தன் பாவங்களை போக்கி கொண்டதால்  இந்த இடம் மிகுந்த புண்ணிய இடமாக கருதப்படுகிறது. கோயிலின் மற்றோரு தனி சிறப்பு எல்லா கோயில்களிலும் பார்வதி தேவியிடம்தான் முருகன் வேல் வாங்கி சூரசம்ஹாரம் நடக்கும்,  இங்கு மட்டும் சிவனிடம் வாங்கி சூரசம்ஹார விழா நடக்கிறது.

சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை

கோயில் அமைப்பு

மாயூரநாதர், அபயாம்பிகை கோயிலில் 4 பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் 9 நிலைகளையும், உட்கோபுரம் 3 நிலைகளையும் கொண்டுள்ளது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறம் திருக்குளம், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் அமைந்துள்ளது.

சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை

முக்கிய விழா

சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்கள் துலா உற்சவம் நடைபெறும். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தில் கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். மேலும் ஐப்பசி 30 -ம் தேதி நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு செல்வார்கள். அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி விழா இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் அபயாம்பிகை சன்னதியில் திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கண்ணி பெண்கள் திருமண வரம் வேண்டியும்  350 -க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்குகள் வைத்து பூஜை செய்தனர். மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அபயாம்பிகையாக பூஜித்த திருவிளக்கிற்கு சகஸ்ரநாம அச்சனையும் ஷோடச உபசார தீபாரதனை பூஜைகள், நடைபெற்றது.  இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget