வளையல் அலங்காரத்தில் காட்சி தந்த மன்மதீஸ்வரர் கோயில் அம்மன் - பரவசம் அடைந்த பக்தர்கள்...!
ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி தந்த அம்பாளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வளையலை பிரசாதமாக பெற்று சென்றனர்.
ஆடி மாத திருவிழாக்கள்
கடந்த ஜூலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
IND vs SL: என்னதான் ஆச்சு இந்திய அணிக்கு? சொதப்பல் பேட்டிங்கை சரி செய்யுமா ரோகித் படை?
குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு மன்மதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடி வெள்ளி ஆடி செவ்வாய் ஆடி அமாவாசை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
Personal Loan: ரூ.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? முழு விவரம்
வளையல் அலங்காரத்தில் காட்சி தந்த அம்பாள்
அதன் ஒன்றாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஆதி சக்தி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து குழந்தை பேர் இல்லாதவர்களுக்கும், தாலி பாக்கியம் நிலைத்திடவும், நோய் நொடி நீங்கவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து அம்பாளுக்கு சந்திரகாப்பு அலங்காரமும், வளையல் அலங்காரமும் செய்தனர். இதில் குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். மேலும் கோயிலுக்கு வந்த பெண்கள் அனைவருக்கும் வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆடிப்பூரம் விழா... ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் லட்சதீபம்... குவிந்த பெண்கள்..