குத்தாலம் காவிரிக்கரையில் தீர்த்தவாரி - பக்தி பரவசத்தில் பக்தர்கள் புனித நீராடல்..!
குத்தாலம் காவிரி கரையில் 5 கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி கரையில் 5 கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல்போனது. இதனையடுத்து சூரியபகவான் தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளை பெறவும் குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனிதநீராடி தவமிருந்து அரக்கனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம்.
அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம். இதன் சிகர நிகழ்வான கார்த்திகை மாத கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது.
காவிரிக்கரையில் எழுந்தருளி சுவாமிகள்
இதனை முன்னிட்டு ஸ்ரீ அரும்பனவனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓம்காளீஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், வெள்ளி மூஷிக வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் மங்கள வாதியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் ஒலிக்க வீதி உலாவாக காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
2025 உங்கள் எப்படி இருக்கப் போகுது? இதோ புத்தாண்டு ராசிபலன்..!
தீர்த்தவாரி நிகழ்வு
அங்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
Kadagam Margazhi Rasi Palan: கடக ராசிக்காரர்களே! கடன் தீரும், பெருமைகள் சேரும் - மார்கழி ராசிபலன்
அப்போது தருமபுரம் ஆதீன குருமஹா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனைத்து கோயில்களில் இருந்து பிரசாதம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு!