ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நாயனார் குருபூஜை விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் ஆயிரத்தில் ஒருவராக எழுந்தருளி பந்தியில் உணவு உண்ட சிறப்புலி நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியி நடைபெற்றது.
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் ஆயிரத்தில் ஒருவராக எழுந்தருளி பந்தியில் உணவு உண்ட சிறப்புலி நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்ரீ வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளிய இவ்வாலயத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்து வாழ்ந்து முக்தி அடைந்த தலமாகும்.
Malavika Mohanan: அட.. ‘அனிமல்’ நாயகன் ரன்பீர் கபூருடன் இணையும் நம்ம மாளவிகா.. எந்தப் படம் தெரியுமா?
அதி தீவிர சிவபக்தராக திகழ்ந்த சிறப்புலி நாயனாரின் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் சிவ பெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதனால் ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரருக்கு "ஆயிரத்தில் ஒருவர்" என்ற சிறப்பு பெயரும் உண்டு. சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கு 999 அடியார்கள் வந்து விட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வராத சூழலில் மனம் கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் சிவபெருமான் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்து நாயனாருக்கு காட்சியளித்தார்.
இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார். இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பூராட நட்சத்திரத்தில் அவதரித்த சிறப்புலி நாயனார் குரு பூஜையும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கார்த்திகை மாத பூராட நட்சத்தித்தை அடுத்து உற்சவரான ஆயிரத்தில் ஒருவர், சிறப்புலி நாயனார் வீதி உலா செல்லும் காட்சியும், தொடர்ந்து சிவவாத்தியம் முழங்க உற்சவரான ஆயிரத்தில் ஒருவர், சிறப்புலி நாயனாருடன் கோயில் வளாகத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அன்னம் வைத்து படையல் இட்டு மகா தீபாராதனை மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது.
Year Ender 2023: டாடா முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை.. 2023இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற படங்கள்!
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது குடும்பத்துடனும், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம்எல்ஏ, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், அரசு வழக்கறிஞர் ராம சேயோன் மற்றும் திரளான சிவனடியார்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு நெய்வேத்தியம் செய்யப்பட்ட உணவுகளை உண்டு சாமி தரிசனம் செய்தனர்.