மேலும் அறிய

Kulasai Mutharamman Temple: சிவனை அழிக்க முயன்ற அரக்கன்- துர்க்கையாக மாறி அரக்கனை வதம் செய்த முத்தாரம்மன்

Kulasai Mutharamman Temple History in Tamil: கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

குலசை முத்தாரம்மன் வரலாறு

குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரள நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?" மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது. முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

Kulasai Mutharamman Temple: சிவனை அழிக்க முயன்ற அரக்கன்- துர்க்கையாக மாறி அரக்கனை வதம் செய்த முத்தாரம்மன்

முத்தாரம்மன் பீட சிறப்பு

முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என வேண்டியதால் கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

குலசையில் 8 அம்மன்கள்

உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான். சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள். இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்ச கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

இங்கு கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும். இதில் வீராகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது. இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை காண மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

குலசை கோவிலில் தசரா பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களான செல்வர், காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் அணிந்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kulasai Mutharamman Temple: சிவனை அழிக்க முயன்ற அரக்கன்- துர்க்கையாக மாறி அரக்கனை வதம் செய்த முத்தாரம்மன்

இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள். அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள். பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டி கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
MK Stalin:
"நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
MK Stalin:
"நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
Vettaiyan Pre Sales : முன்பதிவுகளில் இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்...வேட்டையன் ப்ரீ பிஸ்னஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்
Vettaiyan Pre Sales : முன்பதிவுகளில் இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்...வேட்டையன் ப்ரீ பிஸ்னஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்
தேர்தல் ஆணையம் பாஜக வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது; உச்சநீதிமன்றம் செல்வோம் - செல்வ பெருந்தகை
தேர்தல் ஆணையம் பாஜக வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது; உச்சநீதிமன்றம் செல்வோம் - செல்வ பெருந்தகை
தனியார் மருத்துவ கல்லூரிகளில் லஞ்சமா? - அமைச்சர் மா.சு கொடுத்த உறுதி!
தனியார் மருத்துவ கல்லூரிகளில் லஞ்சமா? - அமைச்சர் மா.சு கொடுத்த உறுதி!
Embed widget