மேலும் அறிய

Diwali Myths: தீபாவளி தொடர்பான 5 புராண கட்டுக்கதைகள்.. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை....

தீபாவளி பண்டிகையானது கொண்டாட்டங்களோடு கட்டுக்கதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித காரணமும், ஒருவித புராண கட்டுக்கதையும் சேர்ந்தே உள்ளது.

தீபாவளி - ராமாயணம்:

தீபாவளியுடன் தொடர்புடைய முக்கிய கதையாக, ராமர் அயோத்திக்கு மீண்டும் வந்து அரசு பொறுப்பு ஏற்பதை குறிக்கும்படியாக அமைகிறது. இது பண்டைய காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதையின்படி, ராமர், அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சீதா ஆகியோருடன், அயோத்தியிலிருந்து 14 ஆண்டுகள் நாடு வனவாசம் சென்றார். ராமன் மனைவி சீதையை இலங்கை அரசன் இராவணன் கடத்திச் சென்றார்.

அதனை தொடர்ந்து சீதையை காப்பாற்றும் பொருட்டு, ராமன் இலங்கை மன்னன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்டார். பின்னர், மீண்டும் அயோத்திக்கு சென்று அரியணை ஏறினார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாக சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.


Diwali Myths: தீபாவளி தொடர்பான 5 புராண கட்டுக்கதைகள்.. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை....

மகாபாரதம்:

இதிகாசமான மகாபாரதத்தில் பாண்டு மன்னனின் ஐந்து மகன்களான பாண்டவர்கள், பகடை விளையாட்டில் கவுரவர்களிடம் தோல்வியடைந்தனர். அதன் விளைவாக  பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தை எதிர்கொண்டனர். அவர்கள், வனவாசத்தை நிறைவு செய்து திரும்பி வந்தது, நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டமும் நிறைந்த நிகழ்வாக அமைந்ததாக புராணம் கூறுகிறது. அவர்கள் வீடு திரும்பியபோது, நகரம் பிரகாசமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இது நீதியின் வெற்றியையும், பாண்டவர்கள் மீதான மக்களின் அன்பையும் குறிப்பதாக அமைந்ததாக புராணம் கூறுகிறது.

காளி தெய்வம்:

மேற்கு வங்கத்தில், காளி தேவியோடு தீபாவளி கொண்டாட்டங்கள் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. தீய சக்திகளுடனான மோதலில் அசுர மன்னன் ரக்தபீஜா, சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் தன்னைப் பிரதிபலிக்கும் சக்தியைப் பெற்றிருந்ததால், மோதலின் தீவிரம் அதிகரித்தது. இதனால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை.

இதையடுத்து காளி தேவி துர்கா தேவியின் நெற்றியில் இருந்து மூர்க்கமாக வெளிப்பட்டு, தீய சக்திகளை அழிக்கும் வேலையில் இறங்கினார். அவர் பயங்கரமான மோதலில் இறங்கி, தீய சக்திகளை அழித்தார். தீய சக்திகளை காளி தெய்வம் அழித்ததை கொண்டாடும் வகையில், தீபாவளி அமைந்ததாக வங்காள மக்கள் கருதுகின்றனர்.

நரகாசுரன் - கிருஷ்ணர்:

இந்தியாவின் தெற்குப் பகுதிகளில், மிகவும் சக்தி வாய்ந்த  அரக்க மன்னன் நரகாசுரனை, கிருஷ்ணர் அழித்ததை கொண்டாடும்  வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

இதுபோன்று பல இடங்களில் பல நம்பிக்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். குறிப்பாக, இந்த தினத்தை தீய சக்திகள் அழிந்து நன்மை பிறந்ததாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ALso Read: Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்...

 

தலைப்பு செய்திகள்

சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget