Aadi - Friday Fasting: பக்தர்களே.. ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா..? இத படிங்க முதல்ல..
Aadi Velli Viratham Benefits: வெள்ளிக்கிழமை என்றாலே சிறப்பு வாய்ந்தது என்றாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமை பலன்களை பல அளிக்கும் மிகவும் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.
Aadi Velli Fasting Benefits: வெள்ளிக்கிழமை என்றாலே ஆன்மீக மனம் மணக்கும் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை என்றாலே அத்தனை மகத்துவம் வாய்ந்தது. அன்றைய தினங்களில் அம்மன் கோயில்களில் பெண்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் காணப்படுவார்கள்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். அவை என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம். ஆடி வெள்ளிக்கிழமை பெண்கள் விரதம் இருந்து வழிபடுவதை சிறப்பாக கருதுகின்றனர். அவ்வாறு ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதை சுக்கிர வார விரதம் என்று கூறுவார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள்?
- ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் பெண்களுக்கு திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
- ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தங்களது மாங்கல்ய பாக்கியம் பலப்படுவதுடன் செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவியை வணங்கி வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள். இந்த வரலட்சுமி நோன்பை சுமங்கலி பெண்கள் செய்வதால் அவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது பெண்களின் நம்பிக்கை.
- வரலட்சுமி நோன்பின்போது மகாலட்சுமி தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
- ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வரும் பாதிப்புகள் நீங்கும். மேலும், ஏராளமான நல்ல பலன்கள் ஏற்படும்
- ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைதோறும் கோயில்களில் வழிபாடு செய்வதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் பிரச்சினை நீங்கும்.
- ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்வதால் நீண்ட நாட்களாக உடலில் இருந்து வரும் நோய் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செல்வ, செழிப்பு:
ஆடி மாதம் என்றாலே கோயில்களில் களை கட்டுவது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளிக்கிழமை தினத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி மாதத்தின் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4வது வாரம் காய் அலங்காரமும், 5வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள். அந்த தினங்களில் அம்மனை நேரில் சென்று வழிபட்டால் பக்தர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிட்டும். குடும்ப இன்னல்கள், சிரமங்கள் நீங்கி செல்வ, செழிப்புடன் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று நன்மைகளை பெறுங்கள். உடல்நலக்குறைவு உள்ள பெண்கள், பக்தர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கோயில் வழிபாட்டில் பங்கேற்றால் மட்டும் போதும்.
மேலும் படிக்க: Aadi Month 2023: ஆடி மாதம் பிறந்தது எப்படி? வேப்பமரம் பூமிக்கு வந்தது எப்படி? புராணங்கள் சொல்வது இதுதான்..!
மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!