மேலும் அறிய

Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகை விழா கோலாகலம்... தஞ்சை பகுதி முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Aadi Krithigai: ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது உண்டு.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை (Aadi Krithigai) சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது நம் முன்னோர்களின் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகை விழா கோலாகலம்... தஞ்சை பகுதி முருகன் கோயில்களில்  குவிந்த பக்தர்கள்

ஆடிக்கிருத்திகை சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த முருகப்பெருமான், ஆடி கிருத்திகை நாளில் சிவபெருமான் அருளால் சூரனை அழிக்க, சரவண பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் 6 பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறியதாக கூறப்படுவது உண்டு. கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது உண்டு.

ஆடிக்கிருத்திகையை (Aadi Krithigai) ஒட்டி தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில், வடக்கு அலங்கம் முருகன் கோயில், குறிச்சித் தெரு முருகன் கோயில், ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில், சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில், பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

அதிகாலை கோயில்களில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 7 மணி அளவில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை முதல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல் மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Embed widget