மேலும் அறிய
Tianmen Mountains : மெய்சிலிர்க்க வைக்கும் சொர்க்கத்தின் வாசல்.. இது எங்கு இருக்கு தெரியுமா?
Tianmen Mountains : இந்த மலையின் மீது இருக்கும் ஆர்ச்சிலிருந்து எட்டிப்பார்த்தால், நல்ல வியூ கிடைக்கும்.

சொர்க்கத்தின் வாசல்
1/6

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் தியான்மென் மலை சீனாவின் தேசிய பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மலையில் இயற்கையாக தோன்றி இருக்கும் ஆர்ச் பகுதியைதான் சொர்க்கத்தின் வாசல் என்று குறிப்பிடுகின்றனர்.
2/6

கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இருக்கும் ஆர்ச் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த ஆர்ச்சிலிருந்து எட்டி பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரித்துவிடும். அந்த அளவிற்கு இயற்கையின் அழகு வசீகரமாக இருக்கும்.
3/6

2005 ஆம் ஆண்டிற்கு பின் இந்த மலைப் பகுதியில் கேபில் கார் அமைக்கப்பட்டது. கேபில் கார் மூலம் சுமார் 4000 அடி வரை சென்றடைய முடியும். அதனோடு மலைக்கு செல்ல சாலைகளும், மலையின் மீது கிளாஸ் ஸ்கைவாக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது
4/6

சொர்கத்தின் வாசல் என்று அழைக்கப்படும் முனைக்கு செல்வதற்கு 999 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டியிருக்கும். இந்த படிக்கட்டுகள் சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் என்று சீனா மக்கள் கூறுகின்றனர்.
5/6

சீனாவின் கணிதத்தின் படி எண் 9 அதிர்ஷ்டத்தை குறிக்கும் எண்ணாக நம்பப்படுகிறது. அதனால்தான் 999 படிகள் கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு கூறுகிறது.
6/6

999 படிக்கட்டுகள் இருந்தாலும், சொர்க்கத்தின் வாசலை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வருடமும் வருகின்றனர்.
Published at : 01 May 2024 11:36 AM (IST)
Tags :
Travelமேலும் படிக்க
Advertisement
Advertisement