தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
சிவில் நீதிமன்றத்தை அன்புமணி வேண்டும் ஆனால் நீதிமன்றம் போகட்டும், நாங்கள் நாடமாட்டோம் என கூறிய ராமதாஸ், அவரே நீதிமன்றம் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

சென்னை : பாமக எங்களுக்கே சொந்தம், பாமக பெயரில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. என சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதல், தற்போது சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் உண்மையான பாமக?
கடந்த சில மாதங்களாகவே பாமக-வில் உட்கட்சிப் பூசல் புகைந்து வந்தது. கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், "தனது தலைமையிலான பாமக தான் உண்மையானது" எனப் பிரகடனப்படுத்திய அன்புமணி, சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
இந்தச் சந்திப்பை "நாடகம்" என்றும் "ஒரு கூத்து" என்றும் விமர்சித்த ராமதாஸ், அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ்: திடீர் திருப்பம்!
ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், சிவில் பிரச்சினைகளை சென்னை சிவில் நீதிமன்றத்தில் அணுகுமாறு உத்தரவிட்டிருந்தது.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போதும் மருத்துவர் ராமதாஸ், கட்சி தொடர்பான வழக்கத்திற்கு சிவில் நீதிமன்றத்தை அன்புமணி வேண்டும் ஆனால் நீதிமன்றம் போகட்டும், நாங்கள் நாடமாட்டோம் என ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் தெரிவித்து வந்த ராமதாஸ், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற அவசர நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அதிரடி முடிவெடுத்துள்ளார்.
இதுநாள் வரை அன்புமணி தரப்புதான் நீதிமன்றம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ராமதாஸ் தரப்பே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகிகள் மீது ராமதாஸ் அதிருப்தி !
"நாம் நீதிமன்றம் செல்ல வேண்டாம்" என இவ்வளவு காலம் ராமதாஸை தடுத்து நிறுத்திய ஜி.கே.மணி, அருள் போன்ற மூத்த நிர்வாகிகள், அவரை தவறான தகவலை சொல்லி, இருட்டில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த அவசர நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த 'நிர்வாகச் சதி'யை உடைத்தெறிந்த ராமதாஸ், "இனி பொறுத்தது போதும்" எனத் தானே சிவில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தச் சட்டப் போராட்டத்திற்குப் பின்னால் மற்றொரு முக்கியத் தகவலும் கசிந்துள்ளது. ஜி.கே.மணி, அருள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், "நாம் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி இவ்வளவு காலம் ராமதாஸை திசைதிருப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ராமதாஸே நீதிமன்றத்தை நாடியுள்ளது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரைத் தவறாக வழிநடத்தினார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















